ETV Bharat / bharat

2021இல் சசிகலா விடுதலை - சிறைத்துறை - Bangalore parappana akrahara prison

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

sasikala
sasikala
author img

By

Published : Sep 15, 2020, 10:37 AM IST

Updated : Sep 15, 2020, 12:17 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கணவர் நடராஜன் மரணம் தொடர்பாக பரோலில் வந்தார். சிறை விதிகளை மீறி ஷாப்பிங் சென்றது பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பான வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளிவந்தன.

கர்நாடக சிறைத்துறை டிஐஜி-ஆக இருந்த ரூபா சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் அளிப்பதை கண்டுபிடித்து குற்றம்சாட்டினார்.

அண்மையில், சசிகலாவின் நன்னடத்தை காரணமாக சிறைத்தண்டனை முடியும் முன்னரே விடுதலையாவார் எனச் செய்திகள் வெளியானது. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், ஆர்டிஐ மூலம் சசிகலா விடுதலை தேதி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த கர்நாடக சிறை நிர்வாகம், வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. விதிக்கப்பட்ட அபாரதத்தொகை 10கோடி ரூபாய் செலுத்தாவிட்டால் விடுதலையாவதில் காலதாமதம் ஆகலாம். இதனால், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி விடுதலையாகலாம் என்று தெரிவித்துள்ளது.

பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு
பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு

ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

நான்காண்டு சிறைத்தண்டனை முடிவடையும் நிலையில், விடுதலையாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் வருகின்ற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், அபராதத் தொகையை செலுத்தி உடனடியாக சசிகலாவை சிறையிலிருந்து விடுவிக்க அவரது ஆதரவாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திலிருந்து 173 கேள்விகள்

Last Updated : Sep 15, 2020, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.