எஸ்.ஏ.பி ஐடி நிறுவனம் ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது . இந்நிறுவனத்தின் கிளைகள் பெங்களூரு, குர்கான், மும்பை உள்ளிட்டப் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
கொரோனோ வைரஸுக்கு அடுத்தபடியாக தற்போது இந்திய மக்களை அச்சப்படுத்தி வருவது பன்றிக்காய்ச்சல்.
இது 1920களில் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. இந்நிலையில், எஸ்.ஏ.பி நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் 2 ஊழியர்களுக்கு எச்1என்1 வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, எஸ்.ஏ.பி இந்தியாவிலுள்ள தனது அனைத்துக் கிளைகளையும் தற்காலிமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்.ஏ.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நிறுவனத்தில் பணிபுரியும் சில ஊழியர்களுக்கு எச்1என்1 வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இது மற்ற ஊழியர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
இதன்படி, அலுவலகத்தினை சுத்தம் செய்து கிருமிகளை அப்புறப்படுத்தும்வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேணடும். இந்த தற்காலிக அலுவலக வரத்து நிறுத்தம் வரும் பிப்ரவரி 28ம் தேதி வரை நீடிக்கும்.
இதனைப் படிக்கும் ஊழியர்கள் யாருக்காவது இந்த நோயின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரையும் இந்நோயிலிருந்து காத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: உயிரைக் குடிக்கும் கொரோனாவால் 2,118 பேர் உயிரிழப்பு - சீன அரசு அறிவிப்பு