டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதியின் மகன் சமிர் திவேதி நேற்று பாஜகவில் இணைந்துள்ளார்.
அப்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்தேன்” என்று சமர் கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் முடிவுக்கு கொண்டுவந்தது, குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார். இதனை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
நரேந்திர மோடிக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சமர், “இது தனது தனிப்பட்ட முடிவு என்று கூறினார். சமர் திவேதியின் தந்தை ஜனார்த்தன திவேதி காங்கிரஸில் பத்தாண்டுகளுக்கு மேலாக பொதுச்செயலாளராக இருந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: மகாத்மா மீது உண்மையான அன்பிருந்தால் பிரக்யாவை நீக்குங்கள்: கே.சி. வேணுகோபால்