ETV Bharat / bharat

பெட்ரோலியப் பொருள்கள் மீதான மாநில அரசின் வரி 25 விழுக்காடு வசூலை பாதிக்க வாய்ப்பு

டெல்லி : பெட்ரோலியப் பொருள்கள் மீது மாநில அரசுகள் வசூலிக்கும் அதிக வரியினால் ஆண்டிற்கு இரண்டு லட்சம் கோடி வருவாய் கிடைத்தாலும், முதல் காலாண்டில் 25 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக ’கிரிசில் ரேட்டிங்க்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Aug 14, 2020, 3:15 PM IST

petrol
petrol

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் பெரிதாக இல்லை. இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது அதிக வர வசூலிப்பதுதான். மாநில அரசு வசூலிக்கும் மதிப்புக் கூட்டு வரி தான் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முதலில் மத்திய அரசால் விதிக்கப்படும் கலால் வரியில் குறிப்பிட்ட ரூபாய் லிட்டருக்கு சேர்க்கப்படும். இரண்டாவதாக, பெட்ரோல் வாங்குபவர்களுக்கும் விற்பனை செய்வதற்கும் இடையில் நடக்கும் மாற்றத்தின் போது நான்கு ரூபாய் வரை சேர்க்கப்படும். இறுதியாக, மாநில அரசால் மதிப்புக் கூட்டு வரி வசூலிக்கப்படும். இத்தகைய வழிமுறைகள் தான் பெட்ரோல் விலை குறையாமல் இருக்க காரணமாகும். இந்நிலையில், இந்த மாநில வரி வசூலிப்பை ஆண்டுக்கு ஏழு முதல் ஒன்பது விழுக்காடு அதிகரித்தால் 1.96 லட்சம் கோடி ரூபாய் வருவாயாக ஈட்டலாம் என்றும் ஆனால், அதே சமயம் முதல் காலாண்டில் 25 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கிரிசில் ரேட்டிங்க்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, "பெட்ரோல், டீசல் விற்பனையின் மொத்த அளவு ஏப்ரல் மாதத்தில் 43 சதவிகிதத்தில் இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 85 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால், ஜூலை மாதத்தில் 83 சதவீதமாகக் குறைந்துள்ளது. மாநிலங்களில் லிட்டருக்கு மூன்று ரூபாய் கூடுதல் விற்பனை வரி வசூலிக்கின்றனர். அதே சமயம் பல மாநிலங்கள், தங்கள் விற்பனை வரி விகிதங்களை நேரடியாக லிட்டருக்கு 1.50 - 1.80 ரூபாயாக உயர்த்தியுள்ளன. இதனால் தான், விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.

பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை வரி மாநிலங்களின் சொந்த வரி வருவாய்க்கு 15 சதவிகிதம் அளிக்கிறது. ஆகவே, கரோனா நிதி நெருக்கடியில் உள்ள மாநிலங்கள் நிதி திரட்டும் முயற்சியாக வரியை அதிகப்படுத்துகின்றன. எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சமயத்தில் இந்த வரி வசூலிப்பை மீட்டெடுப்பது கடினம்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிரிசில் இயக்குனர் அங்கித் ஹாகு கூறுகையில், "வசூலை மேம்படுத்துவதற்கான மற்றொரு வழி அதிக கலால் வரி வசூலிப்பது தான். 2020 மார்ச் மற்றும் மே மாதங்களில் மத்திய கலால் வரி உயர்த்தப்பட்டது. கலால் வரி அதிகரிப்பே மாநில விற்பனை வரியில் பெட்ரோல், டீசலின் வரிவிதிப்பை அதிகப்படுத்த காரணமாக இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.