ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் கங்கனப்பள்ளியிலுள்ள வல்லூரு மண்டல் என்ற இடத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கபடி விளையாட்டு வீரர் நரேந்திரா மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நரேந்திரா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.
கொண்டபேட்டா, சென்னூரு மண்டல் பகுதியில் வசித்த நரேந்திரா, எம்.காம் படித்துள்ளார். கபடி மீதிருந்த அதீத ஆர்வத்தால் அவ்வப்போது கபடி போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிக்கோப்பைகளை தனதாக்கியுள்ளார். இன்னுமொரு வெற்றிக்கோப்பை நரேந்திரா வெல்லும் முன் இந்தத் துயர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நரேந்திரனின் தயார், ’வெற்றிக்கோப்பையுடன் வீட்டிற்கு வருவேன் என சொல்லிச் சென்றான். அவனது உயிரிழப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 1000 பறவைகள் உயிரிழப்பு!