சபரிமலை கோயில் எப்போது திறக்கப்படும் என பக்தர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், கேரள மாநில தேவஸம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "ஜூன் 14ஆம் தேதி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இந்த முடிவை கோயிலின் தலைமை தந்திரியிடமும், திருவிதாங்கூர் தேவஸ்தானத்துடனும் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே எடுத்தோம். இதைப் போல ஜூன் 19 ஆம் தேதி நடக்கவிருந்த கோயில் திருவிழாவும் ரத்து செய்யப்படுகிறது” என்றார்.
முன்னதாக, கேரள முதலமைச்சர் ஜூன் 14ஆம் தேதி சபரிமலை கோயில் திறக்கப்படும் எனவும், கோயில் வளாகத்தில் தகுந்த இடைவெளியை உறுதி செய்யவேண்டியுள்ளதால் 50 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல்கர் கும்பல் வன்முறை வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு