ETV Bharat / bharat

‘சபரிமலை கோயிலை திறப்பது புத்திசாலித்தனமானது அல்ல”

author img

By

Published : Jun 11, 2020, 12:37 AM IST

திருவனந்தபுரம்: கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலைக் கோயிலை திறப்பது புத்திசாலித்தனமானது அல்ல என தந்திரி கே.எம். மோகனூரு தெரிவித்துள்ளார்.

sabarimala-temple-priest-doesnt-want-devotees-to-turn-up

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதையடுத்து மத்திய அரசு நாடு முழுவதும் ஐந்தாம் கட்டமாக ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்கள் திறப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில முக்கிய தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு, சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி கோயில்களைத் திறக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கோயில்கள் திறக்கப்பட்டு மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில், கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலைக் கோயில் வரும் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாதாந்திர பூஜைகளுக்காகத் திறக்கப்பட்டு, வரும் 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு மூடப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக ஆன்லைன் மூலம் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுவதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் கோயிலை திறப்பது புத்திசாலித்தனமானது அல்ல என தந்திரி கே.எம்.மோகனூரு திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவிவரும் நிலையில், நாம் மாதாந்திரப் பூஜைகளுக்காக கோயிலைத் திறப்பதும், கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதும் நாமே தொற்று பரவ காரணமாக இருப்பதற்கு ஈடாகிவிடும். இதனால் கோயில் திறப்பது குறித்து மீண்டும் ஆலோசனை செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதம் குறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், தந்திரி மோகனூரு திருவாங்கூர் தேவஸ்தானம் மீது கொண்டுள்ள அக்கறையில் இந்தக் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இவரது கருத்தினை மாநில அரசும், தேவஸ்தானமும் பொருள்படுத்தவேண்டும் எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.