ETV Bharat / bharat

'முகக்கவசங்கள் அணிந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளாதீர்கள்' - எச்சரிக்கும் இதய மருத்துவர்!

முகக்கவசங்களை அணிந்தவாறே நடைப்பயிற்சியில் ஈடுபட்டால், போதிய ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்காமல் இதய செயலிழப்பு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும் என இதய சிகிச்சை நிபுணர் எச்சரித்துள்ளார்.

PGI Chandigarh  COVID-19  Chandigarh  Dr Yashpal Sharma  சண்டிகர்  ஆக்ஸிஜன் குறைபாடு  முகக்கவசங்கள்  இதய செயலிழப்பு  யஸ்பால் சர்மா
முகக்கவசங்கள் அணிந்து நடை பயிற்சி மேற்கொள்ளாதீர்கள் எச்சரிக்கும் இதய மருத்துவர்
author img

By

Published : May 20, 2020, 12:39 PM IST

கோவிட்-19 தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிந்து கொள்கின்றனர். ஆனால், இதே முகக்கவசங்கள் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று சண்டிகரைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர் யஸ்பால் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், "அரசு ஊரடங்கு விதிகளை தளர்த்தியவுடன் மக்கள் சிலர் வீடுகளை விட்டு வெளியே வரத்தொடங்கியுள்ளனர். மேலும், சிலர் முகக்கவசங்களை அணிந்துகொண்டு காலையில் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்களுக்குப் போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. இது உடலில் பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும்.

மனிதர்கள் கடுமையான செயல்பாடுகளில் ஈடுபடும்போது, இதயம் ரத்தத்தை வேகமாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் செலுத்தும். அப்போது, நமது உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவை ஏற்படும். முகக்கவசங்களை அணிந்துகொண்டு கடினமான வேலைகளில் ஈடுபடும்போது, போதுமான ஆக்ஸிஜன் நமது நுரையீரலுக்கு செல்வது தடுக்கப்படுகிறது.

இதனால் இதய செயலிழப்பு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளன. மக்கள் யாரும் முகக்கவசங்கள் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. இருந்தபோதிலும், அவ்வப்போது முறையான சுவாசத்தை மேற்கொள்வது அவசியமாகிறது. உதாரணமாக பூங்கா அல்லது மரங்கள் அதிகமுள்ள இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளபோது, நன்கு மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக நமக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைத்துவிடும்.

கரோனா பாதித்தவர்களைச் சுற்றியிருக்கிறவர்கள், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பவர்கள் மட்டும் N-95 முகக்கவசங்களை அணிவது போதுமானது. சாதாரண மக்கள் அந்தவகை முகக்கவசங்களை அணிவது அவசியமற்றது. ஏனெனில் அந்தவகை முகக்கவசங்கள் தான் போதிய ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்காமல் தடுக்கிறது. கரோனா தொற்று பாதிக்காதவர்கள் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் முகக்கவசங்களை அணிந்தாலே போதுமானது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வைரஸ் ஒரு உயிரி ஆயுதமாக மாறினால்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.