ETV Bharat / bharat

ஊரடங்கை மீறிய உ.பி., முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு

லக்னோ : ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ ஸ்ரீ பகவான் சர்மா குடு பண்டிட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author img

By

Published : Jun 10, 2020, 2:44 PM IST

ஊரடங்கை மீறியதால்7 வழக்குகளை கண்ட உ.பி முன்னாள் எம்.எல்.ஏ

உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினரான ஸ்ரீ பகவான் சர்மா குடு பண்டிட், ஜூன் 7ஆம் தேதி அவரது முகநூல் பக்கத்திலிருந்து ஒளிபரப்பட்ட நேரலை சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சைக்குரிய காணொலியில் நொய்டாவை நோக்கி செல்லும் கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலையில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் கேக் வெட்டி, ஆடிப்பாடி கொண்டாடியதாக அறிய முடிகிறது.

இது குறித்து புலந்த்ஷாஹர் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் கூறுகையில், "கோவிட்-19 ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மதிக்காமல், 144 தடை உத்தரவை மீறி பெருங்கூட்டம் கூடுவதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆதரவாக இருந்துள்ளார். அந்த காணொலி சரிபார்க்கப்பட்டது. விதிமீறலில் அவர் ஈடுபட்டது உண்மை தான் என விசாரணையில் உறுதியாகியுள்ளது. இது குறித்து நொய்டாவில் உள்ள தாத்ரி காவல் நிலையத்தில், ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டின் கீழ் ஐபிசியின் தொடர்புடைய பிரிவுகளில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இது தொடர்பாக நமது ஈ டி.வி பாரத்திடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ஸ்ரீ பகவான் சர்மா குடு பண்டிட் கூறுகையில் “எனது பிறந்த நாள் ஜூலை மாதம் 10ஆம் தேதி தான். நான் பிறந்தநாளை கொண்டாடவில்லை. என் மாமியார் உயிரிழந்ததால், நொய்டாவில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு புலந்த்ஷாஹருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, அந்த பகுதியில் இளைஞர்களின் குழுவினர் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னைக் கண்டதும், என் காருக்கு அருகில் வந்து, என்னையும் அவ்விழாவில் கலந்துகொள்ள வற்புறுத்தினர்.

அவர்களை என்னால் மறுக்க முடியவில்லை. அவர்கள் என் காரின் முன்னால் கேக்கை வைத்து அதை வெட்டும்படி என்னை வற்புறுத்தினர். அப்போது, நான் நெடுஞ்சாலையில் கொண்டாட வேண்டாம் என்றும் தகுந்த இடைவெளி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.

இளைஞர்களில் ஒருவர் கோடரியைக் கொண்டு வந்து, அதில் கேக்கை வெட்ட வேண்டும் என்று கூறினார். கோடரி ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகும் என்பதால் அதை வைத்து நான் கேக்கை வெட்டினேன். எவ்வாறாயினும், இளைஞர்கள் தவறு செய்ததை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக உதவிகளை வழங்கி வருகிறேன்.

எனது சொந்த உயிருக்கு ஏற்படும் ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து வருகிறேன். பல்வேறு இடங்களில் எனது ஆதரவாளர்கள் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என் செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்ட ஆளும் கட்சியினர் என்னைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வழக்குகளை ஏவுகின்றனர். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். எனக்கான விதிகள் வேறு, ஆளும் கட்சியினருக்கான விதிகள் வேறு என்பது அனைவருக்கும் தெரியும். சத்தியத்திற்காக போராடுபவர்கள் வழக்குகளால் பயந்துவிடமாட்டார்கள்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.