உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 21 ஆயிரத்து 567 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 685 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 25ஆம் தேதியிலிருந்து இந்தியா முழுவதும் பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தும் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவின் கீழ் மூடப்பட்டுள்ளது. அதன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் முன்னெடுத்துவருகின்றன.
இருப்பினும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் அதன் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட மண்டலங்கள் கோவிட்-19 பெருந்தொற்றின் சிவப்பு குறியீட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு உத்தரவை இரண்டாம் கட்டமாக, மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் அரசின் பல்வேறு பணிகளில் மருத்துவர்கள், காவல்துறையினர், வருவாய்த் துறை, தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவிட் -19 க்கு எதிராகப் போராடும் மருத்துவர்களுக்கு பி.பி.இ போன்ற தற்காப்பு உபகரணங்களின் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும் ஒரு முயற்சியாக தேசத்தின் மிகப்பெரிய மருத்துவமனையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இரண்டு ரோபோக்களை சோதனை அடிப்படையில் களமிறக்க உள்ளது.
இதையும் படிங்க : அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்? இருவர் கைது!