ETV Bharat / bharat

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளைக் கும்பல்; எதிர்த்துப் போராடும் நபர் - வைரலாகும் காட்சி!

பெங்களூரு: துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த கும்பலிடம் இருந்து, தன் பொருள்களை மீட்ட நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

robbery-gang-attack-on-a-man-in-bangalore-cctv-video

author img

By

Published : Oct 18, 2020, 3:22 PM IST

கர்நாடக மாநிலம், பெங்களூருவின் புட்டனஹள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீஹரி பிரசாத் என்பவரின் வீட்டில் மூன்று கொள்ளையர் புகுந்துள்ளனர். இதனை உணர்ந்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஸ்ரீஹரி பிரசாத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தன் வீட்டிற்கு உடனடியாக வந்த ஸ்ரீஹரி பிரசாத், தன் வீட்டில் உள்ள பொருள்களை கொள்ளையர்கள் காரில் ஏற்றியிருந்ததைப் பார்த்து அதிர்ந்துள்ளார். உடனடியாக தன் வீட்டுப் பொருள்களை எடுக்க ஹரி பிரசாத் முயற்சிக்க, கொள்ளையர்களில் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனிடையே கொள்ளையர்கள் கற்களைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர்.

துப்பாக்கியைக் காட்டிய மிரட்டிய கொள்ளைக் கும்பல்

இவையனைத்தையும் கடந்து ஹரி பிரசாத் சில பொருள்களை கொள்ளையர்களிடமிருந்து மீட்டார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து புட்டனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஏலம் விடப்படும் நிழல் உலக தாதாவின் சொத்துக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.