ETV Bharat / bharat

'புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்த திட்டம் தயார்' - கல்வித் துறை அமைச்சர்

டெல்லி: புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்த திட்டம் தயாராகவுள்ளது என்றும் இது விரைவில் மாநில அரசுகளுடன் பகிர்ந்துக்கொள்ளப்படும் என்றும் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Roadmap to implement NEP is ready
Roadmap to implement NEP is ready
author img

By

Published : Sep 8, 2020, 11:31 AM IST

தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்பான குடியரசுத் தலைவர், ஆளுநர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்காலத்திற்கு தயாராக உள்ளது என்றும் 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் சமூக, பொருளாதார வாழ்க்கைக்கு இது ஒரு புதிய திசையை வழங்கும் என்றும் கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "பள்ளிக் கல்வியாக இருந்தாலும் சரி, உயர் கல்வியாக இருந்தாலும் சரி, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கான வரைபடத்தை அரசு தயாரித்துள்ளது.

இதைப் பல்வேறு கட்டங்களாக சிறப்பான முறையில் செயல்படுத்த கல்வி அமைச்சகம் 300-க்கும் மேற்பட்ட முக்கியப் புள்ளிகளை உருவாக்கியுள்ளது. இது அடுத்த ஒரு வாரத்திற்குள் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்.

இந்த 300 புள்ளிகள் குறித்து கல்வி அமைச்சகம் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கும், அதன் பின்னர் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வழிகாட்டுதல் தயாரிக்கப்படும்.

இந்தப் புதிய கல்விக் கொள்கை மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும். இது இந்தியத்தன்மையில் இருந்து சர்வதேச வரம்புகளை எட்டும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ​ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், புதிய கல்விக் கொள்கை கல்வியை வணிகமயமாக்குவதுபோல இருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், "இன்று இந்தக் கல்விக் கொள்கையைப் படிக்கும் அனைவரும் அதில் கல்வியை வணிகமயமாக்குவது குறித்து எவ்வித அம்சமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள்" என்றார்.

இதையும் படிங்க: புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - மேற்கு வங்க அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.