ETV Bharat / bharat

மேக் இன் இந்தியா முதல் சுயசார்பு இந்தியா வரை - இணையற்ற வளர்ச்சி திட்டங்கள் - சுயசார்பு இந்தியா

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'மேக் இன் இந்தியா' திட்டம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டபோது, அதனைச் சிறந்த இலக்கு என பலர் பாராட்டினர். கரோனா பேரிடர் காலத்தில் வெளியான 'ஆத்மநிர்பார் பாரத் திட்டம்' (சுயசார்பு இந்தியா) என்பது நிறைவேற்ற வேண்டிய கனவு.

modi
modi
author img

By

Published : Jun 6, 2020, 9:27 PM IST

இந்தியாவை தற்சார்பு பாதையில் நடைபோட உதவும் உற்பத்தி, இயந்திரம், மொபைல் போன்கள் - எலக்ட்ரானிக்ஸ், ரத்தினங்கள் - நகைகள், மருந்துகள், ஜவுளி போன்ற பத்து துறைகளை மத்திய அரசு கண்டறிந்தது. குளிரூட்டும் சாதனம், மரச்சாமன், காலணி ஆகியவற்றை உள்நாட்டில் தயாரிப்பதற்கு மத்திய அரசு 1.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிட்டுவருகிறது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, புதுவிதமான திட்டங்களை இந்தியா முன்னெடுத்துவருகிறது.

செமிகண்டக்டர் (குறை மின்கடத்தி), மாற்றத்துக்குள்ளாகும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஆகியவற்றை உள்நாட்டில் தயாரிக்கும் நோக்கில் 50,000 கோடி ரூபாய் ஒதுக்கி மோடி அரசு மானியத்தைப் பெருக்கியுள்ளது. முன்னணி மொபைல் போன் நிறுவனங்களின் உலகச் சந்தையாக இந்தியாவை மாற்ற இந்த மதிப்புமிக்க திட்டம் உதவும். மேலும், 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி 5.89 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்ய இந்தத் திட்டம் உதவும்.

தேசிய மின்னணுவியல் கொள்கை 2012, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் உயிர்பித்துள்ளது. 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள், 2.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 33 கோடி ஸ்மார்ட்போன் பாகங்களை உள்நாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்ய இந்தக் கொள்கைத் திட்டம் உதவும். ஸ்மார்ட்போன் பாகங்களை ஏற்றுமதி செய்ததன் மூலம், இந்தியாவுக்கு 26,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. 13 லட்சம் கோடி மதிப்பிலான 100 கோடி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதை தேசிய மின்னணுவியல் கொள்கை 2019 இலக்காக வைத்தது.

கடந்தாண்டு, உலக மின்னணுவியல் துறையின் மதிப்பு 136 லட்சம் கோடி ரூபாய் எனவும், அதில் இந்தியாவின் பங்கு 3.3 விழுக்காடு (4.56 லட்சம் கோடி ரூபாய்) எனவும் மத்திய அரசு தகவல் வெளியிட்டது. கரோனாவின் தாக்கத்தால், சீனாவை அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்க முன்னணி நிறுவனங்கள் முனைப்பு காட்டிவருகின்றன. உலகளவில் மின்னணுவியல் மற்றும் மின்னணு பாகங்களின் உற்பத்தியில் சீனாவின் பங்கு 30 விழுக்காடாகும்.

மொபைல்போன்கள் தயாரிப்பில் உலகளவில் இரண்டாவது இடத்திலிருக்கும் இந்தியா, 2025ஆம் ஆண்டுக்குள் முதல் இடத்தைப் பிடிக்க முனைப்பு காட்டிவருகிறது. 2025ஆம் ஆண்டுக்குள், மின்னணுவியல் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் 26 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதை தேசிய மின்னணுவியல் கொள்கை இலக்காக வைத்துள்ளது. இதை அடைவதில் பல தடைகள் உள்ளன. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது, தரமற்ற மின் உற்பத்தி, அதிக வட்டி விகிதம், வளர்ச்சியடையாத உள்நாட்டு உற்பத்தி நிறுவனம், மேம்படாத வடிவமைப்புத் திறன் ஆகியவை இந்தியாவின் பிரச்னைகளாக இருக்கின்றன என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான கலநிலவரங்கள் இருப்பினும், நிதிச் சலுகைகள் மூலம் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு நம்பிக்கை வைத்துள்ளது.

5ஜி, Internet of things, சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழிக் கற்றல், விர்ச்சுவல் ரியாலிட்டி, ட்ரோன்கள், ரோபாட்டிக்ஸ், ஃபோட்டானிக்ஸ் போன்ற துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க தேசிய மின்னணுவியல் கொள்கை வழிவகை செய்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் தேசிய மின்னணுவியல் கொள்கையுடன் எப்போது ஒத்துப்போகிறதோ, அப்போதே நிலையான வளர்ச்சி என்ற பாதையில் இந்தியா நடைபோடும்.

இதையும் படிங்க: இம்ரான் கான் ஒப்புக்கொண்ட உண்மையையே ஐநா அறிக்கை குறிப்பிட்டுள்ளது - வெளியுறவுத் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.