ETV Bharat / bharat

கரோனா நெருக்கடியிலும் ரயில்வே திட்டம் பாதிக்காது- ரயில்வே வாரியத் தலைவர்

author img

By

Published : Jul 9, 2020, 8:05 PM IST

டெல்லி: ரயில்வேயின் இரண்டு பெரிய திட்டங்களான பிரத்யேக சரக்கு ரயில் பாதை மற்றும் புல்லட் ரயில் திட்டம் கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் தாமதமாகாது என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்துள்ளார்.

கரோனா நெருக்கடியிலும் ரயில்வே திட்டம் பாதிக்காது- ரயில்வே வாரியத் தலைவர்
கரோனா நெருக்கடியிலும் ரயில்வே திட்டம் பாதிக்காது- ரயில்வே வாரியத் தலைவர்

கரோனா ஊரடங்கு காரணமாக தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார சரிவு ஆகியவற்றால் நாட்டின் பெரும்பாலான உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதங்களை எதிர்கொண்டுவரும் நேரத்தில், ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ரயில்வேயின் மிகப்பெரிய மேம்பாட்டுத் திட்டமான சரக்கு ரயில் பாதை ரூ .81 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், கிழக்கு டி.எஃப்.சி, பஞ்சாபின் லூதியானாவிலிருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே டங்குனி வரையிலான ஆயிரத்து 839 கி.மீ., இந்தியாவின் தலைநகர் டெல்லியையும், அதன் பொருளாதார மையமான மும்பையையும் இணைக்கும் மேற்கு சரக்கு ரயில் பாதை திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

"டி.எஃப்.சி.சி.ஐ.எல் (Dedicated Freight Corridor Corporation of India) ஒரு பகுதியாக தங்கள் தொழிலாளர்களை பணியிடத்தைச் சுற்றியுள்ள முகாம்களில் வைத்திருந்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் அவர்களில் பலர் ஊரடங்கு காலத்தில் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக ரயில்வே பணிகள் நிறுத்தப்படாமல் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதேசமயத்தில், உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பணியிடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் ஊழியர்கள், கரோனா அச்சுறுத்தல் காரணமாக 15 ஆயிரம் தொழிலாளர்களாகக் குறைக்கப்பட்டனர்..

இதனால் திட்டப்பணிகளில் மந்தநிலை ஏற்பட்டது. தொழிலாளர்கள் முகாம்களிலிருந்து பணிநிலையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு, ரயில்வே துறை அலுவலர்கள் சார்பாக மாநில அரசுகளுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து தொழிலாளர்களுக்கு இ-பாஸ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கூடுதலாக உள்ளூர் நபர்களும் திட்டப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தப்போது, ​​டி.எஃப்.சி.சி.ஐ.எல் தொழிலாளர்கள் ரயில்களிலும் பேருந்துகளிலும் மீண்டும் பணியிடங்களுக்கு சென்றுவருகின்றனர்.

கடந்த மாதத்தில் பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து சுமார் ஏழாயிரம் தொழிலாளர்கள் திட்டப் பணிகளுக்காக மீண்டும் அழைத்து வரப்பட்டனர். டிஎஃப்சி பிரிவுகளில் சுமார் 22 ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.

தனியார் ரயில்கள் செயல்படத் தொடங்கும் சமயத்தில், உள்கட்டமைப்புப் பணிகளை நிறைவடைய முயற்சி செய்துவருகிறோம். இரட்டிப்பாக்கம் மற்றும் மும்மடங்கு உள்கட்டமைப்புப் பணிகளையும் செய்துவருகிறோம்.

டிசம்பர் 2023 இன் காலக்கெடுவைக் கொண்ட தேசிய அதிவேக ரயில் கழகத்தின் (என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்) மும்பை-அகமதாபாத் அதிவேக வழித்தட திட்டத்திற்கான நிதிகளில் ( 1 டிரில்லியன் டாலர்கள்) 80 விழுக்காடு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜிகா) கடனாக அளிக்கிறது.

508 கி.மீ.க்கு 345 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய 68 சதவீத சிவில் ஒர்க் டெண்டர்களையும், அதிவேக தாழ்வாரத்திற்கு 28 எஃகு பாலங்களை தயாரிப்பதற்கான தனி டெண்டர்களும் மகராஷ்டிராவைச் சேர்ந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

திட்டத்திற்குத் தேவையான நிலத்தின் கூட்டு அளவீட்டு கணக்கெடுப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், இந்தத் திட்டத்திற்கு தேவையான 60 சதவீத நிலத்தை நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது (குஜராத்தில் சுமார் 77 விழுக்காடு நிலம், தாதர் நகர் ஹவேலியில் 80 விழுக்காடு மற்றும் 22 விழுக்காடு மகாராஷ்டிரா), என்.எச்.எஸ்.ஆர்.சி.எல். தெரிவித்துள்ளது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் ஊரடங்கு காலத்தில் ஏலதாரர்களின் சந்தேகங்களைத் தீர்க்க ஒரு ஏலக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தொற்று நோயால் ரயில்வேயின் பயணிகள் போக்குவரத்தில் வருவாய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு ரயில்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் வருவாயை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு, சரக்கு போக்குவரத்து கடந்த ஆண்டுகளை விட 50 விழுக்காடு அதிகமாக இருக்கும்”, எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.