ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திலுள்ள பெய்க்போரா கிராமத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தலைவன் ரியாஸ் நாய்கோவும், மற்றொரு போராளியும் பாதுகாப்புப் படை வீரர்களால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து ரியாஸ் நாய்கோ கொல்லப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியதையடுத்து, ஸ்ரீநகர் உட்பட பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீரில் அமைதியை உறுதி செய்வதற்காக பள்ளத்தாக்கின் முக்கியமானப் பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், நாயக்கோவின் சொந்த கிராமமான அவந்திபோரா பகுதியில், இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றும் இதேபோல் சம்பவம் நிகழ்ந்ததால் 16 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதியைக் கொன்ற பாதுகாப்புப் படையினருக்குக் காங்கிரஸ் பாராட்டு