நவீன வளர்ச்சி அதிக அளவிலான மனித குடிபெயர்வு என்பதை வெகு தூரத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது. இந்த குடிபெயர்வின் காரணமாக பல்வேறு பொருளாதார சூழலியல் சிக்கல்கள் உருவாகும் நிலையில், குடிபெயர் மக்களின் வாழ்க்கை சூழலோ மிக மோசமாக உள்ளது. நாம் வின்னளவு உயர்ந்து நிற்கும் கட்டங்களை பார்க்கும் நாம், அதற்கு கீழ் நிற்கும் குடிபெயர் தொழிலாளர்களின் கூட்டத்தை பார்ப்பதில்லை.
இதுபோன்ற சூழலில் இயற்கை தனது உயிர்பன்மைத் தன்மையை முறையான தொடர்புகளுடன் சீர்செய்துகொள்ளும். இந்த சீர்செய்யும் நடவடிக்கையில் சிக்கல் எழும்பட்சத்தில், தன்னுடைய இயற்கையான சூழலுக்கு திரும்ப சில கடினமானத் திருத்தங்களை இயற்கை மேற்கொள்ளும். இந்த ரிவர்ஸ் மைக்ரேஷன் எனப்படும், மீள் குடிபெயர்வு இயற்கையின் திருத்தமாகவேக் கருதப்படுகிறது.
90 விழுக்காடு நுண்கிருமி செல்களான பாக்டீரியாஇ, வைரஸ் ஆகியவை பெரும் நுண்கிருமி கூட்டத்தில் சிறு பகுதியே. இவை சூழியல் நீட்சிக்கு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. இவை மனிதனின் ஜீரனம், நோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன. இத்தனை லட்சம் நுண்ணியுர்கள் மாபெரும் பூமியில் எந்த வித குழப்பமும் இன்றி சீராக இயங்கி வருகின்றன. இவை மனித உடலின் பல்வேறு பாகங்களில் தனது முக்கிய பங்களிப்பை தொடர்ச்சியாகத் தருகின்றன.
உதாரணமாக, ஒரு சத்தான உடல்நிலைக் கொண்ட மனிதரின் உடலில் குடல், நுரையீரல், முகவாய் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உரிய இயக்கத்திற்கு இந்த உயிரினங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்த நுன்னுயிர்கள் சரியான அளவில் ஒழுங்குடன் இயங்கும்பட்சத்திலேயே மனித உடல் இயக்கம் சீராக இருக்கும். அதேவேளை குறிப்பிட்ட பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும்பட்சத்தில் இது நோயாக மாறிவிடும். உதாரணமாக சிறுகுடல் பகுதியில் பாக்டீரியா எண்ணிக்கை தேவையைவிட கூடுதலாக அதிகரிக்கும்பட்சத்தில் ஜீனரம், நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு உடல் சீர்கேடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. நமது நவீன வாழ்க்கையில் இந்த சுகாதாரச் சிக்கல் பெரும் சவாலாக வந்து நம்முன் நிற்கிறது.
பைட்டோ பிளாங்க்டான் எனப்படும் சிறு கடல் தாவரம் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு வாயுவில் உள்ள அசுத்தைச் சுத்தம் செய்யும். வெறும் கடல் பகுதியில் வாழும் இந்த சிறுதாவரம் முக்கிய பங்களிப்பை ஒட்டுமொத்த சூழியல் மேம்பாட்டில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.
நவீன கால வளர்ச்சியில் புவி வெப்பமயமாதல் சிக்கல் நீர்நிலைகளையும் விட்டுவைக்கவில்லை. கடல் வெப்பம் காரணமாக பைட்டோபிளாங்டான் தாவரம் சேதமடைந்துவருவதால் ஒட்டுமொத்த சூழியல் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
நவீன கால வளர்ச்சியின் தாக்கமாக இந்த மாபெரும் குடிபெயர் நகர்வு இயற்கை விதிக்குப் புறம்பானது. எனவே குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் குவிந்துள்ள வாய்ப்பை அனைத்து உள்ளூர் பகுதிகளிலும் பரவலாக்கு வழியை நாம் கண்டடைய வேண்டும். அறிவியலை அடிப்படையாகக் கொண்ட இயற்கையே நமக்கு சிறந்த வழிகாட்டியாகும். எனவே நமது சீரமைப்பு நடவடிக்கைகள் இயற்கையின் அடிப்படையை ஒட்டியே இருக்க வேண்டுமேத் தவிர, போலித்தனமான வளர்ச்சி மற்றும் உலகமயமாக்கலை சார்ந்து இருக்கக் கூடாது.
இதையும் படிங்க: தனிமைப்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் - பினராயி அதிரடி