இதுகுறித்து பேசிய அவர், "மே 21ஆம் தேதிவரை கட்டுப்பாடுகள் தொடரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதுவரை நாங்கள் கவனத்துடன் செயல்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எதுவும் தெரிவிக்காத அவர், ஊரடங்கிலிருந்து வேறுபட்ட கட்டுப்பாடுகள் குறித்து தான் பேசுவதாக தெளிவுப்படுத்தினார். கரோனா சிவப்பு மண்டலத்தில் கண்டிப்பாக கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும், இப்போது, ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் ஒரு பகுதியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து சிவப்பு மண்டலமாக மாறினால் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். பச்சை மண்டலங்களுக்கு (கரோனா பாதிப்பில்லாத மாவட்டங்கள்) கட்டுப்பாடுகளில் இருந்து அதிக தளர்வுகள் இருக்கும் என்றார்.
மேலும், நிதித்துறை அமைச்சர் அமித் மித்ரா தலைமையில், கரோனா மேலாண்மை தொடர்பான அமைச்சரவை குழுவை அமைப்பதாக தெரிவித்த அவர், அக்குழுவில் தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் இருப்பார்கள் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சூழல் சரியாகும்வரை ரயில் சேவைகளை வழங்கவேண்டும் என்றும் அவசர நிலைகளைத் தவிர மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள், பயணங்களை அனுமதிக்கக்கூடாதென வேண்டுகோள் வைத்தார்..
இதையும் படிங்க: லாக்டவுன் தொடர்பாக முரண்பட்ட கருத்துகளை தெரிவிப்பது ஏன்? - மம்தா