கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத அமைப்பினரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகின்றன. சமூக வலைதளங்களில் பரவிய தகவலின் அடிப்படையில் பயங்கரவாதி ஒருவரின் இறுதிச்சடங்கில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஒன்றுகூடியுள்ளனர்.
இந்திய எல்லைக்குள் அதிகளவில் ஊடுருவும் பயங்கரவாதிகள், பொதுமக்களைக் கொன்று அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் பயங்கரவாத காணொலிகளைத் தடுக்கும்நோக்கில் விதிக்கப்பட்டிருந்த அதிவேக இணைய சேவை ஏப்ரல் 27ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் அரசியலைப்புச் சட்டம் 370-ஐ நீக்கியபோது தடைசெய்யப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பார்க்க: 'வெளவால்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்' - ஐ.சி.எம்.ஆர்