ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கத்தை தொடர்ந்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
அடிப்படையான காரணமில்லாமல் முன்னாள் முதலமைச்சர்களை இப்படி கைது செய்து நீண்ட நாட்கள் வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டன.
இந்நிலையில் கடந்த மார்ச் 13ஆம் தேதி பரூக் அப்துல்லா வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ஃபரூக் அப்துல்லாவின் மகனும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கரோனா காரணமாக நாடு முழுவதும் லாக் டவுனில் உள்ள நிலையில், இந்த சமயத்திலும் மெகபூபா முஃப்தியை விடுவிக்காமல் இருப்பது மிகவும் தவறு எனவும் அவரையும் மற்ற தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் உமர் அப்துல்லா தற்போது வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சிந்தியா மீதான வழக்கு முடித்துவைப்பு