சில்லறை விற்பனையாளர்கள் சந்தித்துவரும் நெருக்கடிகள் தொடர்பாக, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கைியல், "கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சில்லறை வணிகம் செய்துவருபவர்களுக்கு 80 - 90 விழுக்காடு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஊரடங்கை படிப்படியாக தளர்வுகளை அளித்தும் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமால் வியாபாரிகள் திணறி வருகின்றனர்.
பெரியளவில் சில்லறை வணிகம் செய்வோர் ரூ. 300 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டு 86 விழுக்காடு அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளனர். சிறியளவில் வணிகம் செய்வோருக்கும் ரூ. 300 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு 33 விழுக்காடு பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து இந்திய சில்லறை விற்பனையாளர் சங்க தலைவர் குமார் ராஜகோபாலன் கூறுகையில், "இந்த ஆண்டு கரோனாவால் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து விரைவில் நாங்கள் மீண்டு வருவோம். நாங்கள் பெருமளவில் அரசையும் வர்த்தக பங்குதாரர்களையும் அதிகம் நம்பி உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: இ.எம்.ஐ. தவணை நீட்டிப்புக்குள் இத்தனை இரகசியங்களா?