மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜிவ் கௌபா, யூனியன் பிரதேசம் ஜம்மு காஷ்மீர் உள்பட தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, குஜராத், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், சுகாதாரத் துறைச் செயலர்கள், அலுவலர்களுடன் கரோனா வைரஸ் (தீநுண்மி) குறித்து ஆலோசனை நடத்தினார்.
காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் நாட்டில் கரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 89 விழுக்காடு உயிரிழப்பு, இந்த ஒன்பது மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும்தான உள்ளன என்பதை மத்திய அமைச்சரவைச் செயலர் மேற்கோள்காட்டினார்.
மேலும், அவர் கரோனா உயிரிழப்பு விகிதத்தை ஒரு விழுக்காட்டிற்கும் கீழ் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனா மருந்தை விநியோகிப்பதற்கான வியூகம் மத்திய அரசிடம் இல்லை - ராகுல் காந்தி