ஏடிஎம்களில் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறைவாகவே கிடைக்கின்றன என்ற செய்திகள் தற்போது பரவி வருகின்றன. இந்நிலையில் இனி இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட மாட்டாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சமீப காலமாக ஏடிஎம்களில் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்திருப்பதற்கான காரணம் குறித்து, ஒரு ஆங்கில நாளிதழ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தது. இதற்கு ரிசர்வ் வங்கி தரப்பில், பெறப்பட்ட பதிலில், இரண்டு ஆயிரம் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட, இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அந்த நிதியாண்டில் மட்டுமே சுமார் 354 கோடி எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது குறைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்நிலையில் கள்ளநோட்டுகள் புழங்குவதைத் தடுக்க உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை ரிசர்வ் வங்கி, நிறுத்தியுள்ளதை வரவேற்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கள்ள நோட்டுகள் புழக்கம்: ரூ. 11 லட்சம் பறிமுதல்; போலீஸ் அதிரடி!