இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேசிய வீட்டு வசதி வங்கியிடம் வைத்திருந்த ரூ.1,450 கோடி மதிப்புள்ள 100 விழுக்காடு பங்கினை மத்திய அரசுக்கு விற்கப்பட்டுள்ளது.
மேலும், நபார்ட் வங்கியிடம் வைத்திருந்த 72.5 விழுக்காடு பங்கினை இரண்டு கட்டங்களாக, 2018 அக்டோபரில் ரூ.1,450 ரூபாய்க்கு 71.5 விழுக்காடும்; 2019 பிப்ரவரியில் மீதமுள்ள பங்கினை ரூ. 20 கோடிக்கும் மத்திய அரசுக்கு விற்றுள்ளோம்' என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கு குறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, இரண்டாவது நரசிம்ஹம் குழுவின் பரிந்துரையின்படி நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் சுமுகப்போக்கிற்காக இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.