கடந்த பாஜக ஆட்சியில் மாநிலங்களவை உறுப்பினரான பீகாரை சேர்ந்த ரவி சங்கர் பிரசாத், சட்டம், தகவல் தொலைத்தொடர்பு ஆகிய துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தார். இந்த மக்களவைத் தொகுதியில் பீகார் மாநிலத்தின் பாட்னா சாஹிப் தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதனையடுத்து, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இந்நிலையில், இன்று மீண்டும் மத்திய அமைச்சராக ரவி சங்கர் பிரசாத் பதவியேற்றுள்ளார்.