ஆந்திராவில் ரேஷன் அட்டையில் இயேசு கிறிஸ்து உருவம் அச்சடிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கி சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பு மக்கள் கண்டனங்களைத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் ஆந்திர அரசு இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தனிநபரின் விளம்பரத்திற்காகப் பரப்பியுள்ள செயல் எனத் தெரிவித்தனர்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாட்லமுரு கிராமத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஒருவர், இயேசு கிறிஸ்துவின் உருவத்தை ரேஷன் அட்டையில் அச்சிட்டு வேண்டுமென்றே பரப்புரை செய்துள்ளார். இவர் மதம் மாறிய கிறிஸ்தவர் அல்ல, தெலுங்கு தேச கட்சியின் தீவிர ரசிகர் ஆவார்.
இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு, இதே நபர் சாய் பாபாவின் படத்தையும் 2017, 2018ஆம் ஆண்டுகளில் பாலாஜியின் புகைப்படத்தையும் அச்சிட்டது குறிப்பிடத்தக்கது. இச்செயலுக்கு அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: போட்டிக்கிடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை: 'தாய்மை'யின் மகத்துவத்தை உணர்த்திய புகைப்படம்!