ETV Bharat / bharat

வேளாண் சட்டங்கள் : என்.டி.ஏ கூட்டணியிருந்து ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி வெளியேறும்!

author img

By

Published : Oct 11, 2020, 3:22 AM IST

ஜெய்ப்பூர் : விவசாயிகளின் நலனை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்கள் மறுஆய்வு செய்யப்படாவிட்டால், நாங்களும் வீதிக்கு வந்து போராடுவோமென ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சியின் தலைவர் ஹனுமான் பெனிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் : என்.டி.ஏ கூட்டணியிருந்து ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி வெளியேறும்!
வேளாண் சட்டங்கள் : என்.டி.ஏ கூட்டணியிருந்து ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி வெளியேறும்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு 13க்கும் மேற்பட்ட சட்ட முன்வடிவுகளை அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ், டி.எம்.சி., திமுக, மதிமுக, விசிக, ஆர்.ஜே.டி., சிபிஐ, சிபிஐ (எம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அப்போது எதிர்த்தன.

நாடு முழுவதும் மத்திய அரசின் இந்தச் சட்ட முன்வடிவுகளைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன.

இருப்பினும், கடந்த செப்.27ஆம் தேதியன்று அவற்றுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து, சட்ட அங்கீகாரம் வழங்கினார்.

இது விவசாயிகளை மேலும் கொதிப்படைய செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டங்கள், ரயில் மறியல் என உச்சக்கட்ட போராட்டங்கள் பஞ்சாப், ஹரியானா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்தன.

மக்களின் எதிர்ப்பின் காரணமாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலி தளம் கட்சி கடந்த மாதம் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியது.

தற்போது, ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியின் தலைவரும், நாகௌர் தொகுதி எம்.பி.,யுமான ஹனுமான் பெனிவால் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

நேற்று (அக்.10) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கம் வகித்துவந்தாலும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

எங்கள் கட்சி விவசாயிகளின் கட்சி.

விவசாயம், விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.

விவசாயிகளின் நலன்கள் தாக்கப்பட்டால் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிப்பதால், இது குறித்து நேரடியாகவே நான் பிரதமரிடம் பேசுவேன். விவாதத்தில் இருந்து சாதகமான பதில் கிடைத்திடாவிட்டாலோ, புதிய சட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்படாவிட்டாலோ நாங்களும் போராட்டத்தைக் கையில் எடுப்போம்.

பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியிலிருந்து நாங்கள் விலகுவோமா என்று கேள்வி கேட்கப்படுகிறது. விவசாயிகள் விஷயத்தில், நாங்கள் ஒருபோதும் காலம் தாழ்த்த மாட்டோம். தீர்வு கிடைக்காவிட்டால் பதவி, அதிகாரம் பற்றியெல்லாம் யோசிக்காமல் வெளியேறுவோம்" எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.