புதுச்சேரி புதிய டிஜிபி
புதுச்சேரி காவல் துறைத் தலைவர் (டிஜிபி) பாலாஜி ஸ்ரீவத்சவா திடீரென டெல்லிக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக டெல்லியில் பணியாற்றிவந்த ரன்வீர் சிங் கிருஷ்ணியா புதுச்சேரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலாஜி ஸ்ரீவத்சவா
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் புதுச்சேரி மாநில காவல் துறையில் டிஜிபியாக பாலாஜி ஸ்ரீவத்சவா பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், அவர் திடீரென டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக ரன்வீர் சிங் கிருஷ்ணியா புதுச்சேரியின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள் துறை அமைச்சகம் நேற்று (டிச. 16) பிறப்பித்துள்ளது.
யார் இந்த புதிய டிஜிபி?
ரன்வீர் சிங் கிருஷ்ணியா 1989ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலராகத் தேர்ச்சிப் பெற்று பணிபுரிய தொடங்கினார். இவர், டெல்லியின் தெற்கு மண்டலத்தின் சிறப்பு அலுவலராக (சட்டம் மற்றும் ஒழுங்கு) பணியாற்றினர்.
2021 புதுச்சேரி தேர்தல்
புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் டிஜிபி பணியிட மாறுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.