உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தெலங்கானா, ஆந்திரா மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 கோடியை ராமோஜி குழுமத்தின் நிறுவனத் தலைவர் ராமோஜி ராவ், செவ்வாய்க்கிழமை (நேற்று) வழங்கினார்.
நிவாரண நிதிக்கான தொகையை ஆன்லைனில் அந்தந்த மாநில முதலமைச்சரின் பொது நிவாரண வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராமோஜி ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கு உத்தரவின் காரணமாக, இரு மாநில முதலமைச்சர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியவில்லை. உலகை அச்சுறுத்தும் பெருந்தொற்றான கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இரு மாநில முதலமைச்சர்களையும் பாராட்டுகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கும் மம்தா பானர்ஜி