ETV Bharat / bharat

'நிலநடுக்கமே வந்தாலும் அசைக்க முடியாது' - ராமர் கோயிலை வடிவமைக்கும் கட்டட கலைஞர்! - உத்தரப் பிரதேச தற்போதைய செய்தி

லக்னோ: வலுவான நிலநடுக்கங்களைத் தாங்கும் வகையிலும் 100 ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்திருக்கும் வகையிலும் அயோத்தியில் ராமர் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ராமர் கோயிலை வடிவமைத்துள்ள சந்திரகாந்த் சோம்புரா தெரிவித்துள்ளார்.

Ram Temple
Ram Temple
author img

By

Published : Aug 1, 2020, 5:54 PM IST

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா, அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல ஆன்மிகத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் கட்டப்படவுள்ள இந்த ராமர் கோயிலை 77 வயதான சந்திரகாந்த் சோம்புரா வடிவமைத்துள்ளார். நாகரா பாணியிலான கட்டடக் கலையைப் பின்பற்றி கட்டப்படவுள்ள இக்கோயில், ஐந்து கோபுரங்களை கொண்டிருக்கும்.

உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலுள்ள உள்ள அனைத்து பழங்கால கோயில்களும் இதே மாதிரியான கட்டடக் கலை முறையில் கட்டப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பழையை முறையே இந்தக் கோயிலிற்கும் பின்பற்றப்படும். ராமர் கோயில் கட்ட வெறும் இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள 67 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலை வடிவமைத்துள்ள சந்திரகாந்த் சோம்புரா கூறுகையில், "ஒரே நேரத்தில் இந்தக் கோயிலில் ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்யலாம். மேலும் வலுவான நிலநடுக்கங்களைத் தாங்கும் வகையில் இந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்திருக்கும் வகையில் அயோத்தியில் ராமர் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கான கற்கள் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. கோயிலின் நீண்ட ஆயுளை உறுதி செய்ய, 200 அடி ஆழத்தில் குழி தோண்டி, பரிசோதனைக்குப் பின் இந்த கற்கள் உறுதி செய்யப்பட்டன" என்றார்.

இதையும் படிங்க: ராமர் கோயிலை எழுப்ப மூலவர்களாக இருந்த அத்வானி, ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.