ETV Bharat / bharat

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள்...! - Rajya Sabha passes farm bills amid ruckus

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

rajya-sabha-passes-farm-bills-amid-ruckus

author img

By

Published : Sep 20, 2020, 4:26 PM IST

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் 7ஆம் நாள் இன்று நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு வேளாண் துறை தொடர்பாக வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார்.

இன்று மாநிலங்களவையில் இந்த மசோதாவை வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு மாநில கட்சிகளின் எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த மசோதா உள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர். மசோதா மீதான விவாதம் நடந்த நிலையில், எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையில் மூன்று மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இதையும் படிங்க: திருக்குறள் ரெபரென்ஸ்...கார்ப்பரேட்டுகளுக்கான நாடாகும்" - திருச்சி சிவா விமர்சனம், கடும் அமளியில் மாநிலங்களவை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.