சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர் சிங், நீண்ட காலமாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகம் செயலிழந்த நிலையில், மருத்துவமனைக்கு வழக்கமாக சென்று சிகிச்சைப் பெற்று வந்தார். இதனிடையே, சிங்கின் உடல் நிலை மோசமடைய சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இன்று (ஆகஸ்ட் 1) பாலகங்காதர திலகரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புகழாரம் சூட்டும் வகையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். கரோனாவுக்கு எதிரான போரில் பிரதமர் மோடிக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் பதிவிட்டிருந்தார்.
தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சி கவிழாமல் இருக்கும் நோக்கில் அமர் சிங் மேற்கொண்ட முயற்சிகள் மூலம் சமாஜ்வாதி தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளித்தது.
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங்குக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட அமர் சிங், கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், தனிக்கட்சி தொடங்கி சோபிக்காத நிலையில், அரசியலிலிருந்து விலகினார். இருப்பினும், 2016ஆம் ஆண்டு, சமாஜ்வாதி கட்சியின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினரானார்.
இதையும் படிங்க: மோடிக்கு ராக்கி கயிற்றை அனுப்பிய பாகிஸ்தானிய பெண்மணி யார்?