பாஜகவின் மிக முக்கிய தலைவர்களுள் ஒருவர் ராஜ்நாத் சிங். இவர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் 19ஆவது முதலமைச்சராக 2000ஆம் ஆண்டு பதவியேற்றார். இதன் பின்னர், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 2003 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2004ஆம் ஆண்டு மே மாதம் வரை விவசாயத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பதவி வகித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு லக்னோ தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராஜ்சிங், உள்துறை அமைச்சராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில், இம்முறையும் மத்திய அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.