நாடு முழுவதும் 44 புதிய பாலங்களை பாதுப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
ஏழு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்தப் பாலங்கள் அனைத்தும் பி.ஆர்.ஓ எனப்படும் எல்லை சாலைகள் அமைப்பு சார்பில் கட்டப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவானே, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், அருணாசல் மாநிலலத்தில் உள்ள தவாங் பகுதியில் உள்ள நெசிப்ஃபு சுரங்கப்பாதை திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டங்களை தொடங்கிவைத்து பேசிய அவர், “நாட்டின் பாதுகாப்பு யுக்திக்கு இந்த திட்டங்கள் முக்கியப் பங்காற்றும். வேகமான போக்குவரத்திற்கு இந்த உட்கட்டமைப்புத் திட்டங்கள் பெரும் உதவி செய்யும்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், எல்லை பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய 44 பாலங்கள் அனைத்தும் எல்லைப் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் கட்டப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் பத்து, லடாக், உத்தரகாண்ட் மற்றும் அருணாசல பிரதேசத்தில் தலா எட்டு, பஞ்சாப் மற்றும் சிக்கிமில் தலா நான்கு, இமாச்சல பிரதேசத்தில் இரண்டு பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கடன் தவணை காலக்கெடுவை நீட்டிக்க முடியாது - ரிசர்வ் வங்கி திட்டவட்டம்