ETV Bharat / bharat

ராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நாடு மறவாது - ராஜ்நாத் சிங் - ராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நாடு மறவாது

டெல்லி: வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நாடு மறவாது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்
author img

By

Published : Jun 17, 2020, 2:16 PM IST

இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவிவரும் நிலையில், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனிடையே, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் வெடித்து தாக்குதல் நடைபெற்றதில் இந்தியா ராணுவத்தைச் சேர்ந்த இருவர் 20 பேர் கொல்லப்பட்டனர்.

பல்வேறு தலைவர்கள் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துவந்த நிலையில், மூத்த அமைச்சர்கள் மெளனம் காத்துவந்தனர். இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நாடு மறவாது. வீரர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற விரும்புகிறேன். இம்மாதிரியான கடினமான சூழலில் நாடு அவர்களுடன் தோளோடுதோள் நிற்கும். அவர்களின் வீரத்தாலும் துணிவாலும் நாடு பெருமை கொள்கிறது.

கல்வான் பள்ளாத்தாக்கில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு கலக்கமும் வேதனையும் அடைந்தேன். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து துணிவையும் வீரத்தையும் எடுத்துரைத்து கடமையின்போது உயிர் தியாகம் செய்துள்ளார்கள். இந்திய ராணுவத்தின் பாரம்பரியத்தை இது எடுத்துரைக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சீனப் பிரச்னையில் மெளனம் காக்கும் பிரதமர்: எதிர்க்கட்சியினர் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.