மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் இன்று சியாச்சின் பனிமலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார். இதற்கு பிறகு அவர் ராணுவ வீரர்களுக்கிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய ராஜ்நாத், "கடினமான சூழ்நிலைகளில் கூட ராணுவ வீரர்கள் அவர்களுடைய கடமையை தைரியமாக செய்துள்ளனர். சியாச்சின் பனிமலையில் உயிரிழந்த 1100 ராணுவ வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன். அவர்கள் ஆற்றிய வீரதீர செயல்களுக்கு தேசம் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது" என்றார்.
சியாச்சின் பனிமலையில் ராஜ்நாத் சிங்குடன் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் உடன் இருந்தார். 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி சியாச்சின் பனிமலைக்கு சென்று வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.