வரும் 21ஆம் தேதி தலைநகர் டெல்லி நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், முப்படைப் பிரிவுகளின் தளபதிகளும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கான ஆயுதங்கள், வெடி மருந்துகளை கொள்முதல் செய்வது குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்மையில், ரஷ்யாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங், ரஷ்யாவின் துணைப் பிரதமர் யூரி இவனோவிச் போரிசோவ் உடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ரஷ்யாவிடம் இருந்து இந்திய அரசு வாங்கிய விமானப்படையின் சு-30 எம்.கே.ஐ, மிக் -29 விமானங்கள், இந்திய கடற்படையின் மிக் 29 கேக்கள், டி-90 போர் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்ற போர்க்கப்பல்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக உபகரணங்கள் கப்பல்களில் கடல் வழியாக இந்தியாவை வந்தடைந்தது கவனிக்கத்தக்கது.