நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். வேறு மாநிலங்களிலிருந்து ராஜஸ்தானில் வேலை பார்த்த தொழிலாளர்கள் உணவு மற்றும் தங்கும் இடம் இல்லாமல் தவித்துவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், சில தொழிலாளர்கள், மத்தியப் பிரதேசத்திலுள்ள தங்கள் வீடுகளுக்கு ராஜஸ்தானிலிருந்து நடந்தே செல்லத் தொடங்கியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடந்து செல்லும் இந்தத் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை சென்றடைவதற்கு ஒரு வாரமாவது ஆகும்.
"நாங்கள் நடந்து செல்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். ஒரு நாளில் இரண்டு வேலை மட்டுமே சாப்பிட்டுவிட்டு நடந்துசெல்கிறோம். எங்கள் வீடுகளைச் சென்றடைவதற்கு இதைத் தவிறர வேறு வழியில்லை" என்று ராஜஸ்தானிலிருந்து மத்திய பிரதேசத்துக்கு நடந்து செல்லும் ஒரு தொழிலாளி விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா