ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கன்பத் ஜன்கட். கேரள மாநிலம் கண்ணூரில் மார்பிள் கல் வேலை செய்யும் கூலி தொழில் செய்து வருகிறார். தற்போது கரோனா பெருந்தொற்றை நாடு சமாளித்து கொண்டிருக்கும் வேளையில், அனைத்து மாநில மக்களுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியிருக்கிறார் கன்பத் ஜன்கட்.
ஆம், கரோனா நோய்க் கிருமி தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேரள அரசின் செயல்பாடுகளில் கவரப்பட்ட இவர், தனது குடும்பத்தினருக்காக சேமித்து வைத்திருந்த தொகையான 10ஆயிரம் ரூபாய்யை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு தானமாக வழங்கியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து கட்டணமா? - எச்சரிக்கும் துணை முதலமைச்சர்
இது குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய கன்பத், “கரோனாவின் தாக்கம் நாட்டு மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. எனவே என்னால் முடிந்த உதவியை செய்தேன்” என்றார்.
நேற்று (ஏப்ரல் 16) மாவட்ட தாலுகா அலுவலகம் சென்ற கங்பத், தனது நிவாரண தொகைக்கான காசோலையை தாசில்தார் சஞ்சீவனிடத்தில் வழங்கினார். கன்பத் தனது குடும்பத்தினருடன், தெக்கி பஜார் பகுதியில் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.