ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜோத்பூரில் உள்ள எஸ்.என். மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் 2019 டிசம்பர் மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது முதலமைச்சர் அசோக் கெலாட்டின் (காங்கிரஸ்) தொகுதி என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: அங்கன்வாடியில் புகுந்த பாம்பால் குழந்தைகள் அச்சம்!