ETV Bharat / bharat

ராஜஸ்தானில் பெண்ணை துன்புறுத்திய ரவுடி அடித்துக்கொலை! - ரவுடி அடித்துக்கொலை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சுமேர் கிராமத்தில் திருமணமான பெண்ணுக்கு துன்புறுத்தல் கொடுத்த ரவுடி ஒருவரை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

harassing woman  beaten to death  death  Rajasthan  ராஜஸ்தான்  ஜெய்பூர்  ரவுடி அடித்துக்கொலை  பெண்ணைத் துன்புறுத்திய ரவுடி அடித்துக்கொலை
ராஜஸ்தானில் பெண்ணைத் துன்புறுத்திய ரவுடி அடித்துக்கொலை
author img

By

Published : Jul 22, 2020, 12:05 PM IST

ராஜஸ்தான் மாநிலம் ஜலவர் மாவட்டத்திலுள்ள சுமேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ பக்ரி. இவர், மீது பாலியல் சீண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் அப்பகுதி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில் கடந்த வாரம் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை அவர் துன்புறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கான முயற்சியில் இருந்தனர். இருந்தபோதிலும் பக்ரிக்கு பாடம் புகட்ட நினைத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பக்ரியை இரும்பு கம்பிகளால் காட்டுத்தனமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: இயற்கை வளத்தைக் காக்கப் போராடிய தலித் இளைஞரை சித்ரவதை செய்த காவலர்கள் !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.