உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னதாகவே அனுமதிக்கப்பட்டுள்ள திருமணங்கள் மட்டுமே நடத்தவும், திருமண நிகழ்வில் முப்பது நபர்களுக்கு மேல் கூடுவதைத் தவிர்க்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் சார் ஆட்சியரான ஷீட்டில் பன்சால் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை ஒத்திவைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், மக்கள் கூட்டமாகக் கூடுவதைக் கட்டுப்படுத்தவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். இந்தச் சமயத்தில் தான் திருமணம் செய்துகொண்டால் அது மக்களுக்குத் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்ற அவர், உலக நாடுகளைப் போல இந்தியாவில் உயிரிழப்புகள் நிகழாமல் தடுக்க மக்கள் தங்களால் முடிந்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவை எதிர்த்து நடைபெற்ற விழிப்புணர்வு திருமணம்!