இது குறித்து மத்திய அரசின் தலைமைக் கணக்கர், இந்திய ரயில்வே நிதி நிலை அறிக்கையை இன்று (டிசம்பர் 2) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், ' கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரயில்வே உதிரி வருவாய் சரிவைச் சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2016-17ஆம் ஆண்டில் ரூ.4,913 கோடியாக இருந்த வருவாய் 66.10 விழுக்காடு சரிவைக் கண்டு, ரூ.1,665.61 என சரிந்துள்ளது.
ரயில்வே உதிரி வருவாய் பயணிகளின் பயன்பாட்டுச் சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால், தற்போது இந்திய ரயில்வே, அதன் பயணிகள் சேவைகள் மற்றும் பிற பயிற்சி சேவைகளின் செயல்பாட்டு செலவைப் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. பயணிகள் மற்றும் பிற பயிற்சி சேவைகளின் செயல்பாட்டில், ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய சரக்கு போக்குவரத்தின் லாபத்தில், கிட்டத்தட்ட 95 விழுக்காடு பயன்படுத்தப்பட்டது.
இதுமட்டுமின்றி மூத்த குடிமக்கள் சலுகை பயண அட்டையை போலியான மருத்துவச் சான்றுகள் வாயிலாக சிலர் பெற்றதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. அரசு அனைத்து விவகாரத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பயணிகள் ஒழுங்கு கட்டுப்பாட்டு முறை மற்றும் சலுகைப் பயணிகளின் வயதைக் கண்காணிப்பதில் சிக்கல் உள்ளது. சலுகை பயண அட்டை முன்பதிவுகளை தடுக்கவும்; போதுமான சரிபார்ப்பு கட்டுப்பாடுகள் இல்லை' என மத்திய அரசு தலைமைக் கணக்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'எதிர்பார்த்தது 640 கோடி, கிடைத்ததோ ரூ.72 ஆயிரம் கோடி'- ஐஆர்சிடிசி பங்குக்கு கடும் கிராக்கி