இந்திய ரயில்வேயின் பல்வேறு சமையல் கூடங்களிலிருந்து தினமும் 2 லட்சத்து 60 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை ரயில்வே அமைச்சகம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாட்டின் அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மண்டல வாரியான சமையல்கூட நிர்வாகிகள் குறித்த விவரங்கள் மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆரம்பகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமையல் கூடங்களின் தயாரிப்புத் திறன்களின் அடிப்படையில் தினமும் 2 லட்சத்து 60 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்.
தேவை அதிகமானால், விநியோகத்தை அதிகரிக்க மேலும் சமையல் கூடங்கள் கண்டறியப்பட்டு உணவு தயாரிக்கப்படும். ஒரு சாப்பாடு 15 ரூபாய்க்கு வழங்கப்படும். இதற்கான தொகையை மாநில அரசு செலுத்தும்.
தேவைக்கேற்ப சாப்பாடு எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய ரயில்வேயின் உணவு ஏற்பாடு, சுற்றுலாக் கழகம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: உணவுப் பொருட்களை பதுக்கிய அலுவலர்கள் - பசிக்கொடுமையில் வாடும் கிராம மக்கள் போராட்டம்