ETV Bharat / bharat

பத்திரிகையாளர்களை விடுதலை செய்க... உ.பி முதல்வருக்கு ராகுல் கோரிக்கை!

டெல்லி: அவதூறு வழக்கின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என உத்தரப் பிரதேச முதலமைச்சருக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

rahul gandhi
author img

By

Published : Jun 11, 2019, 11:39 PM IST

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ”ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் தூண்டுதலின் பேரில் உண்மைக்கு புறம்பான, எனது கொள்கைக்கு எதிராக, முழுக்க முழுக்க பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களை கைது செய்தால் இங்குள்ள செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும்.

ராகுல் காந்தி ட்வீட்
ராகுல் காந்தி ட்வீட்

ஆகையால், உத்தரப் பிரதேச முதலமைச்சர் முட்டாள் தனமாக செயல்படாமல், கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர்களை விடுதலை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:

Rahul tweet on journalist spreading fake news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.