மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடந்த "ஜனநாயகத்தின் உரையாடல்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனக்கு பிடித்த கால்பந்து அணி ஜூவேன்டாஸ் என கூறியுள்ளார்.
மேலும், பார்சிலோனா, ரியல் மேட்ரிட் அணிகளில் தனக்கு பிடித்தது ரியல் மெட்ரிட் தான் எனவும், ரோனால்டோ தான் தனக்கு பிடித்த கால்பந்து வீரர் எனவும் கூறியுள்ளார். ரோனால்டோ ரியல் மெட்ரிட் அணியில் விளையாடிய வரை அந்த அணிதான் தனக்கு பிடித்ததாக இருந்தது எனவும் தெரிவித்தார்.
ரொனால்டோ ரியல் மெட்ரிட் அணிக்காக 438 போட்டிகள் கலந்து கொண்டு 450 கோல்களை அடித்துள்ளார். ஒன்பது ஆண்டுகளாக ரியல் மெட்ரிட் அணிக்கு விளையாடிய ரொனால்டோ 2018 ஆம் ஆண்டு ஜூவேன்டாஸ் அணியில் சேர்ந்தார்.