டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத் தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலம், நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இதற்கிடையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கருத்துக்களையும், போராட்டங்களையும் முன்வைக்கின்றன.
இந்நிலையில், "மோடி அரசாங்கம் விவசாயிகள் மீது நிகழ்த்தும் அட்டூழியங்கள் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராக நம் குரல்களை ஒன்றாக எழுப்புவோம்'' என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சமூக ஊடகங்களில் 'விவசாயிகளுக்காக பேசுங்கள்' என்ற பரப்புரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, "ஒரு காணொலியின் மூலமாவது விவசாயிகளுக்காக பேசுங்கள்" என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
किसानों से बातचीत करके एक बात साफ़ हो गयी- उन्हें मोदी सरकार पर रत्ती भर भी भरोसा नहीं है।
— Rahul Gandhi (@RahulGandhi) September 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
किसान भाइयों की बुलंद आवाज़ के साथ हम सब की आवाज़ भी जुड़ी है और आज पूरा देश मिलकर इन कृषि क़ानूनों का विरोध करता है।#ISupportBharatBandh pic.twitter.com/r2Xhuy10wf
">किसानों से बातचीत करके एक बात साफ़ हो गयी- उन्हें मोदी सरकार पर रत्ती भर भी भरोसा नहीं है।
— Rahul Gandhi (@RahulGandhi) September 25, 2020
किसान भाइयों की बुलंद आवाज़ के साथ हम सब की आवाज़ भी जुड़ी है और आज पूरा देश मिलकर इन कृषि क़ानूनों का विरोध करता है।#ISupportBharatBandh pic.twitter.com/r2Xhuy10wfकिसानों से बातचीत करके एक बात साफ़ हो गयी- उन्हें मोदी सरकार पर रत्ती भर भी भरोसा नहीं है।
— Rahul Gandhi (@RahulGandhi) September 25, 2020
किसान भाइयों की बुलंद आवाज़ के साथ हम सब की आवाज़ भी जुड़ी है और आज पूरा देश मिलकर इन कृषि क़ानूनों का विरोध करता है।#ISupportBharatBandh pic.twitter.com/r2Xhuy10wf
அதேபோல காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்கள் "மிகவும் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் நமது விவசாயிகள் மீது தாக்குதலை நடத்துகிறது. விவசாயத்தையும் விவசாயிகளின் வருவாயையும் மோடி தனது முதலாளித்துவ நண்பர்களுக்கானதாக மாற்ற முயற்சித்து வருகிறார்" என குற்றம்சாட்டியுள்ளது.
"இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு தீங்கு விளைவித்து பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும்" என்றும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை ஒருபுறமிருக்க, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்குப் பயனளிக்கும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு கூறிவருகிறது.
இதையும் படிங்க: மோடி அரசை விவசாயிகள் நம்ப தயாராக இல்லை: ராகுல் காந்தி