பிகார் சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்டோபர் 28 ஆம் தேதி வால்மிகிநகர், குஷேஷ்வர் அஸ்தான் ஆகிய இரண்டு இடங்களின் பேரணிகளில் உரையாற்றவுள்ளார். பாஜக இரண்டு கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடவுள்ளது.
மேலும், காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் போட்டியிடவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.