இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும் மோடி அரசின் முதலாளிகளுக்கு கிடைக்கும் பரிசுகளுக்கு பணம் செலுத்துகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பெட்ரோல், டீசல் விலையையும் தற்போதுள்ள டீசல், பெட்ரோல் விலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார்.
பாஜக அரசாங்கம் பெட்ரோல் மீதான கலால் வரியை 258.47 சதவீதமும் டீசல் மீதான 819.94 சதவீதமும் உயர்த்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையை இன்று உயர்த்தின. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 48 பைசாவும், டீசல் லிட்டருக்கு 23 பைசாவும் உயர்ந்தன. ஜூன் 7 ஆம் தேதியிலிருந்து ஒன்பதாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
-
Middle class and the poor pay for the gifts the crony capitalists get. #शर्म_करो_लुटेरी_सरकार pic.twitter.com/q69cqlF83Q
— Rahul Gandhi (@RahulGandhi) June 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Middle class and the poor pay for the gifts the crony capitalists get. #शर्म_करो_लुटेरी_सरकार pic.twitter.com/q69cqlF83Q
— Rahul Gandhi (@RahulGandhi) June 15, 2020Middle class and the poor pay for the gifts the crony capitalists get. #शर्म_करो_लुटेरी_सरकार pic.twitter.com/q69cqlF83Q
— Rahul Gandhi (@RahulGandhi) June 15, 2020
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 2014 மே 16ஆம் தேதி சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 107.09 அமெரிக்க டாலராக இருந்தது, அதே நேரத்தில் 2020 ஜூன் 15 அன்று மோடி அரசாங்கத்தில் இருக்கும்போது 40.66 அமெரிக்க டாலராக இருக்கிறது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
மேலும், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 66.43 அமெரிக்க டாலர்கள் குறைவாக இருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2014இல் இருந்ததைவிட இப்போது அதிகமாக உள்ளது என்றார்.
இதையும் படிங்க: நவம்பரில் உச்சமடையுமா கரோனா பாதிப்பு? ஐசிஎம்ஆர் விளக்கம்