ETV Bharat / bharat

இந்திரா காந்தியின் 35ஆவது நினைவு நாள் - ராகுல் காந்தி  ட்வீட்! - ராகுல் காந்தி  டீவிட்

டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அஞ்சலி செலுத்தும் விதமாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

Indira death anniversary
author img

By

Published : Oct 31, 2019, 9:50 AM IST

நாட்டின் முதல் பெண் பிரதமரும், இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று போற்றப்படும் இந்திரா காந்தியின் 35ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து, டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Indira death anniversary
ராகுல் காந்தி ட்வீட்

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இன்று என் பாட்டி திருமதி இந்திரா காந்தியின் நினைவு நாள். அவரின் உறுதியான நோக்கங்கள், அச்சமற்ற முடிவுகள் ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொள்வது எனக்கு ஒவ்வொரு அடியிலும் வழிகாட்டும். முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்திஜிக்கு எனது அஞ்சலி” என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க:

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்: பிரதமர் மோடி இன்று மரியாதை...!

Intro:Body:

Rahul Gandhi on Indira death anniversary

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.