கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் இந்தியாவில் அதிகரித்துவரும் சூழலில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, கரோனா பரவல், ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு எனப் பலவற்றைக் குறிப்பிட்டு மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று காணொலி கலந்தாய்வு மாநாடு மூலம் மாநிலத் தலைவர்களிடையே பேசினார். அதில், கரோனா பரவலைத் தடுக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது எனவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாத மத்திய அரசைக் கண்டித்து வருகின்ற 29ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்கின்றன' - பிரதமர் மோடி